Advertisement

Responsive Advertisement

ஜாதி எதிர்ப்பு கவிதை: சமத்துவத்தை வலியுறுத்தும் வரிகள்

படிப்பே அவர்களின் மூலதனம்
பகைமை உணர்ச்சியே
இவர்களின் முட்டாள்தனம்
ஆதி மனிதன் எந்த ஜாதி
அதை யோசிக்காமல்
நீயெல்லாம் என்ன ஜாதி?
தொழிலுக்கு பெயர் வைத்தான்
அந்த பெயரையே எங்கள் மேல் திணித்து வைத்தான்.

ஒன்றை சாண் வயிற்றிக்கு
ஒரு படி நீ சாப்பிட்டால்
நீ உயர்ந்த ஜாதி
உன் இரத்தம் கருஞ்சிவப்பில் இல்லையென்றால்
நீ மேல் ஜாதி
நீ பருகும் சிறு நீரை பருகியதும்
நான்கு நாள் அடக்கி கொண்டால் பெரிய ஐாதி அரை மணி நேரம்
கூன் குறுகி
கால் செறுப்பை கையில் எடுத்து கொண்டு
தெருவை கடந்து பார் அப்போது தெரியும்
அதையும்
அவன் மகன் கண்டால் அது புரியும்
வெட்டுவதா வீரம்
குடிசையை கொளுத்துவதா தைரியம் உரக்க சொல்கிறேன்
நான் இந்து அல்ல
பிரிக்கும் ஜாதி தேவையில்ல
மதம் ஜாதி வெறி கொண்ட
எவனையும் மதிக்கவில்லை

Post a Comment

0 Comments